செவ்வாய், 6 ஏப்ரல், 2010

எனது ஊர்


அகஸ்தியர் சிகரத்தில் மறையும் சூரியன்

நவம்பர் வெள்ளத்தில் கொட்டி தீர்க்கும் பாணதீர்த்தம்

தொண்ணுற்றி இரண்டாம் ஆண்டு வெள்ளத்தில் இங்கி இருந்த உயர்மட்ட பாலம் அடித்து செல்ல பட்டபின் ராணுவத்தால் ஓராண்டுக்கு மட்டும் என அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இன்னும் சேவையில் இருக்கிறது இந்தியராணுவத்தின் தரமான பணிக்கு இது சான்று

பாய்ந்து சீறிவரும் அருவி மக்கள் குளிக்க சிறிய இடம் மட்டும் உள்ளது

படகு பயணம் பாதுகாப்பானதா தேக்கடி நிகழ்வுக்கு பின் பாதுகாப்பு உபகரன்கள் கொடுக்க படுகின்றன அனால் படகுகளின் அமைப்பு பாதுகாப்பானது இல்லை தேக்கடி போல் உயர் ரக படகுகள் இருந்தால் பாதுகாப்பு அதிகம் ஆனாலும் மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா

முழு கொள்ளளவில் பயமுறுத்தும் பாவநாசம் அணை
மேலே காண்பது பாணதீர்த்தம் அருவி , அணையில் படகு சவாரி , முழு கொள்ளளவில் நூற்றி நாப்பது அடி தண்ணீருடன் கடல் போல் பயமுறுத்தும் பாவநாசம் ஆணை
பணியின் நிமித்தம் பல் ஊர்களில் இருந்திருக்கேன் ஆனாலும் என் ஊர் போல் எதுவும் எனக்கு ரசிக்கவில்லை அதனால்தான் பணியில் ஓய்வு பெற்றதும் நம் ஊரிலேயே செட்டில் ஆகிட்டேன் ஆடி ஓடி திரிந்த இடங்களை மீண்டும் காண அமைதியாய் நான் இருக்கும் ஊர் கல்லிடைகுறிச்சி சுற்றிலும் இயற்கை வளம் கொழிக்கும் ஊர் இன்னும் காற்று மாசு படவில்லை தண்ணீர் பஞ்சம் கிடையாது ஆனாலும் இங்கும் மெதுவாய் இயற்கை சுற்றுலா பயணிகளால் மாசுபடுவதை உணர்கிறேன் சுற்றிலும் இயற்கை வளம் கொழிக்கும் பகுதிகள் யாரையும் பரவசத்தில் ஆழ்த்தும் இங்கு சமீபகாலமாக சுற்றுப்புற சுழல் மாசு அடைந்துவருகிறது மணல் கொள்ளையால் ஆறு வறண்டு நிலத்தடி நீர் மட்டம் இங்கி இப்ப நுறு அடிக்கு போய்விட்டது ( இருபது ஆண்டுகளுக்கு முன் இது இருபது அடியாக இருந்தது நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளாவுக்கே அதிக மணல் கடத்த படுகிறது .யார் கேட்க யாரை கேட்க என்பதே புரியவில்லை இனியாவது தகுந்த நடவடிக்கை இல்லை எனில் தாமிரபரணி தாயின் கண்ணீர் நம்மை சும்மாவிடாது